×

மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மாற்றி இரவு பகலாக சீரமைத்து பயன்பாட்டிற்கு வந்தது

பெரம்பலூர்,மே7: மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன் மின்மாற்றி இரவு பகலாக சரிசெய்து பயன் பாட்டிற்கு வந்தது. 18 கிராம ங்களை சேர்ந்த 21,704 மின் நுகர்வோர் பயன்பெறுவார்கள் என திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் செடியழகன் தெரிவித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெரம்பலூர் மின்பகிர்மான வட்டம் 110/33-22-11 கி.வோ. மங்களமேடு துணை மின் நிலையத்தில் உள்ள 110/11 கி.வோ திறன் மின்மாற்றி கடந்த 1ம்தேதி அன்று சுமார் இரவு 8 மணி அளவில் பழுதடைந்தது. இதனால் மங்களமேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறப்படும் கிராமங்களான மங்கள மேடு முருக்கன்குடி, ரஞ்சன்குடி. வாலிகண்டபுரம் அனுக்கூர் குடிகாடு. மேட் டுப்பாளையம். சின்னாறு டேம், எறையூர், வி.களத்தூர் பெருமத்தூர் ஆகிய கிரா மங்களுக்கு மின் விநி யோகம் தடைப்பட்டது.

ஆனால் அன்று இரவு 10 மணியளவில் அருகில் உள்ள 33/11 கி.வோ. கழனி வாசல் மற்றும் 33/11 கி.வோ நன்னை ஆகிய 2 துணை மின் நிலையங்க ளில் இருந்து மாற்று மின் சாரம் வழங்கப்பட்டு வந் தது. இருந்தும் தங்கள் கிராமப் பகுதிகளில் குறைந்த மண் அழுத்தம் கிடைப்பதால் மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்தமுடிவதில்லை, குடிநீர் வினியோகம் முற்றி லும் பாதிக்கப்படுகிறது, கம்ப்யூட்டர், மிஷனரிகளை இயக்க முடியாததால் வியா பாரம் முற்றிலும் ஸ்தம்பித் துப் போய் உள்ளது எனக் கூறி மங்களமேடு துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாலிகண்டபுரம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையிலும், வி.களத்தூ ரில் உள்ளூர் சாலையிலும் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட னர். கடுமையான வெப்பத் தின் தாக்கம் காரணமாக பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் மிகுந்த வேத னைக்கு உட்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவ சங்கர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செடியழகன் ஆகியோரது உத்தரவுக ளின்படி, பழுதடைந்த திறன் மின் மாற்றியை மாற்ற, போர்க்கால அடிப் படையில் இரவு பகலாக மின் வாரிய பொறியாளர் கள் மற்றும் பணியாளர்க ளால் பணிகள் செய்து புதிய திறன் மின்மாற்றி அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து 5ம்தேதி மாலை 6 மணி யளவில் மேற்கண்ட கிரா மங்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்கப் பட் டது. புதிய மின் திறன் மாற் றியை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் செடியழகன், பெரம்பலூர் வட்ட மேற்பார்வைப் பொறி யாளர் அம்பிகா ஆகியோர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

விழா வில் செயற் பொறியாளர்கள் சேகர், மேகலா, அசோக்குமார், திலகர், மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ரவிக்குமார், முத்தமிழ் செல்வன், செல்வராஜ் மற் றும் உதவிபொறியாளர்கள் சுரேந்திரன், கொளஞ்சி நாதன், அருண், பரமேஸ்வ ரன் மற்றும் ஏராளமான மின்வாரியப் பணியாளர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செடியழகன் தெரிவிக்கையில், இதன் மூலம் மங்களமேடு துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 21,704 மின் நுகர் வோர்கள் பயன்பெறுவார் கள். இந்தப்பணிகளை மிக குறுகிய காலத்தில், துரித மாகசெய்து, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பயன் பாட்டிற்கு ஏற்றவாறு மின் விநியோகத்தை சீரமைத் துக்கொடுத்த துறைசார்ந்த அனைவருக்கும் நன்றிக ளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

The post மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மாற்றி இரவு பகலாக சீரமைத்து பயன்பாட்டிற்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Mangalamedu sub ,station ,Perambalur ,Trichy Zone ,Chief Engineer ,Chediyazhagan ,Tamil Nadu ,Mangalamedu ,Dinakaran ,
× RELATED சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது